தமிழ்நாடுமாவட்டம்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டது. மேலும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

GHRQXSnagAEJh7r

இந்நிலையில் இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதலில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிட கல்வெட்டு மற்றும் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

GHRP2YeaIAAa8Dh

கருணாநிதி நினைவிட திறப்பு விழாவில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், வைகோ, கோபாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = two

Back to top button
error: