வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் ஜூனியர் மெக்கானிக், ஜூனியர் எலக்ட்ரிஷியன், அஸ்சிஸ்டண்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன், சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் மற்றும் டைம் கீப்பர் ஆகிய பணிகளுக்கான 24 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி:

ஜூனியர் மெக்கானிக்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஐடிஐ மெக்கானிக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் எலக்ட்ரிஷியன்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஐடிஐ எலக்ட்ரிஷியன் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அஸ்சிஸ்டண்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஐடிஐ ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பிசிஏ அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிகிரியுடன் டைப் ரைட்டிங் திறன் பெற்றிருக்க வேண்டும்.

டைம் கீப்பர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

ஜுனியர் மெக்கானிக், எலக்ட்ரிஷியன், ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.19,500 முதல் 71,900 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டருக்கு மாதம் ரூ.35,600 முதல் 1,30,800 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம் கீப்பருக்கு மாதம் ரூ.18,200 முதல் 67,100 வரை சம்பளமாக கொடுக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு சுய விவரங்கள் மற்றும் தேவையான கல்வித் தகுதிகளுக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

எழுதுபொருள் (ம) அச்சுத்துறை ஆணையரகம்

11, அண்ணா சாலை, சென்னை-2.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்

31.01.2024

அதிகாரபூர்வ அறிவிப்பு:

http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy eight = seventy nine

Back to top button
error: