ஆரோக்கியம்

லிச்சி பழத்தில் மறைந்திருக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள்!!

இந்த இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியான லிச்சி பழத்தில் மறைந்திருக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்று, லிச்சி பழத்தின் அற்புத குணங்கள் பற்றி அறிவோம்.

லிச்சி பழத்தின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் நமது உடலை இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராட தூண்டுகின்றன.

லிச்சி பழம் சருமத்தை இளமையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கிறது. வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை மீளுருவாக்கம் செய்ய வழி செய்கிறது.

தாகம் தணிக்கும் உணவில் லிச்சி முக்கிய இடம் வகிக்கிறது. கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்து நீர்ச்சத்தை தக்கவைக்க உதவுகிறது.

வயிற்று உபாதைகளை லிச்சி தடுக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கி குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

லிச்சியில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்த அளவை குறைக்க உதவுகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும்.

கொழுப்புச்சத்து குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ள லிச்சி தின்பண்டமாக பயன்படக்கூடிய ஒரு ஆரோக்கியமான தேர்வு. இது குறைந்த கலோரிகள் கொண்ட ஓர் இயற்கை பழமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

forty five − = 43

Back to top button
error: