ஆரோக்கியம்

பளபளப்பான சருமம் மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்..!

கற்றாழையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்க பயன்படுகிறது. மேலும் அனைத்து தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் கற்றாழையை பயன்படுத்தலாம். பொலிவான சருமத்தை பெறவும், அடர்த்தியான கூந்தலுக்கும் கற்றாழையை உபயோகிக்கலாம்.

கற்றாழை பயன்கள்:

முகம் கழுவுவதற்கும், ஃபேஸ் மாஸ்க்காகவும் கற்றாழைச் சோற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்தும் பயன்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கற்றாழையில் பல வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன, இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள அமிலங்களும் நொதி உடல்நலத்தை மேம்படுத்துகின்றன.

கற்றாழையில் உள்ள புரோட்டியோலிட்டிக் நொதியானது, தலையின் சருமத்தில் உள்ள சேதமடைந்த செல்களை சரிப்படுத்த உதவி , முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது,

கற்றாழை தலையில் பொடுகு மற்றும் அரிப்பு ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.

இருமல் மற்றும் ஜலதொஷத்தில் இருந்து நிவாரணம் பெறவும் கற்றாழை உதவுகிறது. கற்றாழை ஒரு மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது

கற்றாழையை வறண்டு போன, அழற்சி உள்ள சருமத்தின் மீது இதனைப் பூசினால் நோய்த்தொற்றினால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் குறையும்.

கற்றாழைச் சோற்றை ஓட்மீல் மற்றும் பாடி லோஷனுடன் கலந்து பயன்படுத்தினால் மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கற்றாழை இறந்த செல்களை அகற்றவும் பாதத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கவும் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =

Back to top button
error: