ஆரோக்கியம்

முட்கள் நிறைந்த யானை நெருஞ்சிலில் உள்ள வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்!

யானை நெருஞ்சிலில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. சிறுநீரகக் கல் வெளியேற யானை நெருஞ்சில் காயை காயவைத்து உலர்த்தி கஷாயம் செய்து குடித்தால் போதும்.

நெருஞ்சில் தண்டை இடித்துச் சாறு எடுத்து பாலுடன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரககல், எரிச்சல், விந்து நீர்த்துப்போதல், சிறுநீர் போகும் போது வலி, ஆண்மைக்குறைவு இவைகள் நீங்கும்.

யானை நெருஞ்சிலின் சமூலம்(அனைத்தும்) அரைத்து நெல்லி அளவு எடுத்து எருமைத்தயிரில் கலக்கி காலையில் மாத்திரம் மூன்று நாட்கள் உட்கொண்டால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், தேக எரிச்சல் நீங்கும்.

சிறுநீரகக்கல், சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல் ,அடிவயிற்று வலி, சிறுநீர் மஞ்சலாக செல்வது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் நெருஞ்சில் குணப்படுத்தப்படுகிறது. இதன் இலை சாறு சிறுநீரகத்தில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. ஆண்களுக்கு வயோதிகக்காலத்தில் ஏற்படும் புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினை சீர் செய்து புராஸ்டேட் சுரப்பியை சீராக சுரக்கச் செய்கிறது.

நெருஞ்சில் சிறுநீரகத்தை பாதுகாத்து சிறுநீர் துவாரம், ஆண்குறி புண், ஆண் மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு இவைகள் நீங்கி பெண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், பால்வினை தொற்றுநோய்க்கள் போன்ற நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகை.

ஆண்களுக்கு ஏற்படும் சொப்பனஸ்கலிதம், தாது உடைதல், சிறுநீ்ர் எரிச்சல் என்பவற்றை குணமாக்க இலை, காம்பு, காய் என்பவற்றை ஒரு கையளவு எடுத்து 250 மிலி சுத்தமான நீரில் போட்டு 30 நிமிடம் வைத்தால் அந்த நீரானது எண்ணெய் அல்லது குழப்பு போல் மாறும் இதைக் குடித்துவர‌ மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

வெள்ளைப்படுதல் மற்றும் வயிற்றுப்புண்கள் நீங்க நெருஞ்சில் இலையை இடித்து சூரணம் செய்து அதை பாலில் போட்டு நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

80 + = eighty eight

Back to top button
error: