சினிமாதமிழ்நாடுமாவட்டம்

கேப்டன் விஜயகாந்த் மறைவு.. இன்று அனைத்து வித படப்பிடிப்புகளும் ரத்து!!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த நாயகனாக ஜொலித்து வந்தவர் தான் விஜய்காந்த். தனது அசத்தலான நடிப்பால் திரையுலகை கலக்கி வந்த இவர் பல ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார்.

கடந்த இரு மாதங்களாக சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று காலை இயற்கை எய்தினார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, கேப்டன் விஜயகாந்தின் மறைவையொட்டி இன்று (டிசம்பர் 29) அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

74 − = seventy three

Back to top button
error: