Skip to content
Daily Tamilnadu
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

Samsung: இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Galaxy M06 5G, M16 5G ஸ்மார்ட்போன்கள்!

முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங் (Samsung), இந்திய சந்தையில் அதன் புதிய M-Series மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவனம் MediaTek Dimensity 6300 சிப்கள் பொருத்தப்பட்ட Galaxy M06 5G மற்றும் Galaxy M16 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவற்றில், M06 5G ஸ்மார்ட்போன் 4GB மற்றும் 6GB RAM உடன் இரண்டு வகைகளில் வருகிறது, இதன் விலை ரூ.9,999, ரூ.11,499 என நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இரண்டுமே 128 ஜிபி சேமிப்பகத்துடன் வருகின்றன. இந்த அறிமுகச் சலுகையின் கீழ், இந்த போன்களை வாங்கும்போது ரூ. 1000 தள்ளுபடி கிடைக்கும். 500 கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 7 முதல் இ-காமர்ஸ் தளமான அமேசானில் விற்பனைக்குக் கிடைக்கும்.

samsung m16

M16 5G ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் கொண்டு வருகிறது. 4 ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.12,499, 6 ஜிபி வேரியண்டின் விலை ரூ.13,999, 8 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,499 ஆகும். மூன்று வகைகளும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் கிடைக்கின்றன. அறிமுகச் சலுகையின் கீழ், ரூ.1,000 கேஷ்பேக்கை நிறுவனம் வழங்குகிறது.

Advertisement

இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 5 முதல் அமேசானில் விற்பனைக்கு வருகிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, நிறுவனம் 25 வாட்ஸ் வேகமான வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும், 50MP முதன்மை கேமரா, செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8MP கேமராவுடன் வரும் என்றும் தெரிவித்துள்ளது.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

Rvay4b

Advertisement
Advertisement