தமிழ்நாடுவணிகம்

தங்கம் விலை இன்று அதிரடியாக ரூ.560 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 அதிகரித்து, சவரனுக்கு ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மாதம் 28ஆம் தேதி ரூ.50,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு, நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்று ரூ.200 குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52,000-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் தங்கம் கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.6,500க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.84 ஆகவும், வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 அதிகரித்து ரூ.84,000 ஆகவும் உள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ninety nine − = ninety seven

Back to top button
error: