வணிகம்

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொடுவதும், திடீரென விலை குறைவதுமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு 145 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைந்து 86 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி 2 ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து 86 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− one = 3

Back to top button
error: