
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் காலமானார்.
கோட்டா ஸ்ரீனிவாச ராவ் பல நாட்களாக வயது முதிர்வு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இருந்தார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தனது வாழ்க்கையில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நகைச்சுவை, வில்லன் மற்றும் துணை வேடங்கள் மூலம் கவனத்தை ஈர்த்தார்.
இந்த நிலையில் திரைப்பட பிரபலங்களும் ரசிகர்களும் ராவின் மறைவுக்கு சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.