ஆன்மீகம்

செவ்வாய் கிழமை ஏன் முடி வெட்டக்கூடாது?

செவ்வாய்க்கிழமைகளில் ஹேர்கட் மற்றும் ஷேவ் செய்ய கூடாது என்று இந்து மதத்தில் கூறுகின்றனர். ஆனால் இவற்றில் இன்று வரை எந்த ஒரு அறிவியல் உண்மையும் இல்லை.

ஏன் செவ்வாய்க்கிழமைகளில் ஹேர்கட் மற்றும் ஷேவ் செய்யக்கூடாது என்று சொல்லுகின்றனர் என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் சொல்லி வைப்பது இல்லை. செவ்வாய்க்கிழமைகளில் முடி நகம் வெட்டினால் வீட்டிற்கு நல்லது அல்ல என்றும் தரித்திரம் பிடித்து கொள்ளும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

அதை சிலர் பின்பற்றுவதும், பலர் அதை நம்பாமல், இது வெறும் கட்டுகதை என்றும் உதாசீன படுத்தவும் செய்கின்றனர். எந்தவொரு அறிவியல் உண்மையும் இல்லாத இந்த நம்பிக்கையை பலர் மூடநம்பிக்கை என்று நிராகரிகரித்துள்ளனர்.

இந்த நம்பிக்கை சரியானதா? அல்லது தவறானதா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

இதன் மூலம் முன்னோர்கள் நமக்கு கூற கருதிய விஷயங்கள் என்ன என்பதை நாம் தெளிவான மற்றும் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக இந்துக்களின் முக்கிய பெண் தெய்வங்களான துர்கை மற்றும் லட்சுமி தேவிக்கு செவ்வாய்க்கிழமை தான் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் இந்து மதத்தை பின்பற்றும் பெண்கள் வீட்டில் கண்டிப்பாக பூஜைகள் செய்கின்றனர்.

இதை பாரம்பரியமாக நாம் கடைபிடித்து வருகிறோம். இந்நாட்களில் முடி வெட்டுதல் மற்றும் சவரம் செய்தல் கடவுளுக்கு உகந்த செயல் அல்ல என்று கருதுகின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில், செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் கடன்கள் கொடுப்பதையோ, அல்லது கடன் பத்திரம் தருவதையோ செய்வது இல்லை.

இதற்கான காரணம், செவ்வாய்க்கிழமைகளில் நமது பணத்தை பிறர்க்கு கடன் ஆகவோ அல்லது வேறுவிதம் ஆகவோ கொடுத்தால், நாம் வணங்கும் கடவுள் ஆகிய லட்சுமி தேவி தன் வீட்டின் இருந்து சென்று விடுவாள் என்று மக்கள் கருதுகின்றனர்.

இதனால் வீட்டின் செல்வ வளம் குறைந்து விடும். லக்ஷ்மி தேவி செல்வச் செழிப்பைக் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை என்பது செலவுக்கான நாள் அல்ல. இது வருமானத்திற்கான நாள் என்று மக்கள் கருதக்கின்றனர்.

இந்த நாளில் பொருட்களையும் பணத்தையும் பிறருக்கு கொடுப்பது நமது வீட்டில் வறுமையை வரவைக்கும் என்று நினைக்கின்றனர். எனவே, இந்த நாளில் எந்த ஒரு பொருளையும் யாருக்கும் கொடுக்க கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள்.

மேலும், இந்த நாளில் பொருள் மற்றும் பணத்தை பிறருக்கு கொடுப்பது வீட்டில் வறுமையை வரவைக்கும் என்று நம்புகின்றனர்.

ஜோதிட சாஸ்திரம்:

ஜோதிட சாஸ்திரத்தின் பார்வையில் செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டுதல் மற்றும் ஷேவிங் செய்தல் போன்ற செயல்களை பின்பற்றினால் ஒரு நபரின் ஆயுட்காலத்தில் சுமார் எட்டு மாதங்கள் குறைந்து விடும் என்று சொல்ல படுகிறது.

மேலும், செவ்வாய் கிரகத்தின் தெய்வம் செவ்வாய் ஆகும். இத்தெய்வம், மனித உடலின் இரத்தத்தில் வாழ்கிறது என்று நம்பப்படுகிறது மற்றும் மனிதனின் தலை முடி இரத்தத்திலிருந்து உருவாகிறது.

இரத்த ஓட்டம் சீராக இல்லாத போது தான் முடி உதிர்வு பிரச்சனைகள் கூட ஏற்படும். மற்றொரு ஜோதிட புராணத்தில் செவ்வாய் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதன் காரணம், நமது முடியின் நிறம் கருப்பு. கருப்பு நிறத்திற்கு உரியவர் சனி பகவான் ஆவார். எனவே, சனி பகவான் நம் உடலில் முடியில் இருப்பவர் என்று நம்புகிறோம்.

செவ்வாயின் ஆளும் தெய்வம் சனிபகவான். உண்மையில் சனி, செவ்வாயின் எதிர்மறை விளைவுகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளார். நாம் ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டினால், அது நமது விதியை ஆள்வதற்கு, சனி பகவானுக்கு சக்தியை கொடுக்கும்.

இதனால் செவ்வாயின் எதிர்மறை விளைவுகள் நம் மீது ஏற்படும். இதனால், நம் வாழ்வில் நிறைய போராட்டங்களை சந்திக்க நேரிடலாம். இருப்பினும், அறிவியில் ரீதியாக இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

பொதுவாக இந்து முறையை பின்பற்றும் பெண்கள் செவ்வாய்க் கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்வது இல்லை. அதே போல் தான், சிகை அலங்காரம், சவரம் மற்றும் நகங்களை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களையும் மக்கள் செவ்வாய்க் கிழமைகளில் செய்வதில்லை.

அதே வகையான நம்பிக்கையை கொண்டு இருந்தாலும், சில குடும்பங்களில் செவ்வாய்கிழமைகளில் வழக்கமான வீட்டை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதை எந்த வகையிலும் நிறுத்துவது இல்லை.

ஹேர்கட், ஷேவ் மற்றும் நகங்களை வெட்டுதல் போன்ற காரியங்களை செவ்வாய்க்கிழமைகளில் செய்யும் போது வீட்டிற்கு துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்புகின்றனர்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வெளியே எரிவது (அவைகள் குப்பையாக இருந்தாலும் சரி), பணம் கொடுப்பது மற்றும் அனுப்புவது போன்ற செயல்களும் கூட துரதிர்ஷ்டம் என்று கருதுகின்றனர்.

செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டுவது மற்றும் ஷேவிங் செய்வது சரியா? தவறா? என்ற வாதங்கள் இருந்தாலும், ஒவ்வொரு தனிநபரும் அவர் எடுக்கும் முடிவை செயல்படுத்துவதில் சுதந்திரமும் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy nine = 84

Back to top button
error: