ஆன்மீகம்இந்தியா

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.. 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (மே 18) பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை 60,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆனதாக தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy = seventy two

Back to top button
error: