ஆன்மீகம்

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 ஆன்மிக குறிப்புகள்

கோவிலுக்கு அணிந்து செல்லும் ஆடை:

கோவிலுக்கு செல்லும் போது தூய்மையான ஆடையை நாம் அணிந்து செல்ல வேண்டும். குறிப்பாக என்றோ ஒரு நாள் சில மணி நேரம் உடுத்தியது தானே என்று நினைத்து திரும்பவும் அதே ஆடையை கோவிலுக்கு உடுத்தி செல்லக் கூடாது. மேலும் பாரம்பரிய முறைப்படி சேலை, தாவணி போன்ற ஆடைகளை உடுத்துவதே கோவிலுக்கு செல்கிறோம் என்ற உணர்வைத் தரும்.

புடவையின் முந்தானை:

பெண்கள் புடவையைக் கட்டும்போது முந்தானையை அப்படியே கீழே விடுவது தான் அழகாக இருக்கும் என்று அப்படி உடுத்துகிறார்கள். ஆனால் அது சிறந்தது அல்ல. முந்தானையை எப்போதும் முன்பு எடுத்து இடுப்பில் செருக வேண்டும். அது தான் முறையும் கூட. இது பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும் பெண்களுக்கு சேலை கட்டிய முழு உணர்வையும் தரும். மேலும் அப்படி செய்வது குடும்பத்திற்கு நல்லது.

விரித்த தலைமுடி:

பெண்கள் இப்போதெல்லாம் நவீன காலத்திற்கு ஏற்றது போல் தலைமுடிக்கு ஏதேதோ செய்து முடியை அப்படியே விரித்து விடுகின்றனர். ஆனால் அப்படி செய்வது தீமையை மட்டுமே தரும். முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அது மட்டும் அல்லாமல் ஆன்மிக ரீதியாக பார்க்கும் போது மகாபாரதத்தில் திரௌபதி சபதம் ஏற்கும் போது தலைமுடியை விரித்து விட்டு சபதம் முடியும் வரை அப்படியே இருப்பார். அப்படி சபதம் மேற்கொண்டதால் பெண்கள் தலைமுடியை விரித்து விட்டால் குல அழிவு ஏற்படும் என்பது வழக்கம்.

வளையல் அவசியம்:

பெண்கள் பொதுவாக நவீன வளையல்களை அணிவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் சத்தம் வராத வளையல்களை மட்டுமே அணிகின்றனர். ஆனால் அப்படி அணியக் கூடாது. வளையல் அணியாமல் எந்தவித சுப காரியங்களையும் செய்யக் கூடாது. கண்ணாடி வளையல்கள் தான் எப்போதும் மங்கள ஓசையைத் தரும். மகா லட்சுமி குடியிருக்க மங்கள இசை அவசியமானது.

குளித்த பிறகு விளக்கேற்றுதல்:

காலையில் எழுந்தவுடன் அப்படியே விளக்கை ஏற்றக் கூடாது. முகம் மட்டும் கழுவி ஏற்றக்கூடாது. சிலர், கணவன் மனைவி உறவில் இருந்தால் மட்டும் தான் குளிக்க வேண்டும் என்றும் அசைவ உணவு சாப்பிட்டால் மட்டும் தான் குளிக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அது தான் தவறான சிந்தனை. குளித்தப் பின்பே விளக்கை ஏற்றுவது அல்லது மங்கள காரியங்கள் செய்வது போன்றவை நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighty eight − seventy eight =

Back to top button
error: