விளம்பரம்

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை.. மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்..!

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு துறையான பெங்களூரில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகம் (NAL) விஞ்ஞானி/கிரேடு-IV பிரிவுகளில் 30 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதோடு அந்தந்த பதவிக்கு ஏற்ப பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை அடிப்படை ஊதியத்துடன் கூடுதலாக, டிஏ, எச்ஆர்ஏ, டிஏ, எல்டிஏ, மருத்துவச் செலவுகள், குழந்தைகள் கல்விக் கொடுப்பனவுகள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும் அனைத்துப் சலுகைகளும் பொருந்தும்.

இந்தப் பணியிடங்கள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) மேற்பார்வையின் கீழ் நிரப்பப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.nal.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3 ஆகும்.

பகிர்வு:

0 கருத்துக்கள்

கருத்து தெரிவிக்க

Are you human? Please solve:Captcha


அறிவிப்புகள் 0
விளம்பரம்
விளம்பரம்
error: