Skip to content
Daily Tamilnadu
சனி, 5 செப்டம்பர் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 395 அதிகாரி பணியிடங்கள்: மாதச் சம்பளம் ரூ.1.56 லட்சம் வரை – விண்ணப்பிப்பது எப்படி?

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள 395 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மேலாளர், மூத்த மேலாளர், தலைமை மேலாளர், உதவிப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்படும். இந்தப் பதவிகளுக்கு நிரந்தர அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

பதவியைப் பொறுத்து ஏதேனும் ஒரு பட்டம், BCom, BE/BTech, MBA, MCA, CA, CMA, CS, MTech, MSc, அத்துடன் வங்கித் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பதவியைப் பொறுத்து வயது 22 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கு (ST) ஐந்து ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்குப் பத்து ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

Advertisement

இணையவழியில் விண்ணப்பிக்கப்படவுள்ள இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள், இணையவழித் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, பதவியைப் பொறுத்து, மாதச் சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,56,500 வரை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதர விவரங்களுக்கு, https://www.unionbankofindia.bank.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

eUxfti

Advertisement
Advertisement