
மேஷம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சிலமாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.
மிதுனம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
கடகம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
சிம்மம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
கன்னி
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். போராடி வெற்றி பெற வேண்டிய நாள்.
துலாம்
மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். உங்கள் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப் படலாம். மொத்தத்தில், இன்று அதிக அளவில் பொறுமைத் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். தெளிந்த சிந்தனையுடன் இருக்க வேண்டிய நாள்.
தனுசு
குடும்பத்தில் இருந்து வந்த பழைய பிரச்சனைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
மகரம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
கும்பம்
திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். தாயாரின் உடல் நிலை படிப்படியாக சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.