
இன்றைய நாள் (20-06-2025)
விசுவாவசு-ஆனி 6-வெள்ளி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 9:30 – 10:30
மாலை 4:30 – 5:30
கௌரி நல்ல நேரம்
காலை 12:00 – 1:30
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
ரேவதி இரவு 7.08 வரை பின்பு அசுபதி
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
பூரம், உத்திரம்
இன்றைய ராசிபலன் :-
மேஷம் :
இன்று பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப் படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களுக்காக அலைய வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
ரிஷபம் :
இன்று தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோதைரியத் துடன் செய்து முடிப்பீர்கள்.
மிதுனம் :
இன்று வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.
கடகம் :
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள்.
சிம்மம் :
இன்று உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
கன்னி :
இன்று வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும்.
துலாம் :
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம் :
இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும்.
தனுசு :
இன்று எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும்.
மகரம் :
இன்று எதிரில் இருப்பவரை சரியாக எடைபோடுவீர்கள். பணபற்றாக் குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
கும்பம் :
இன்று வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம்.
மீனம் :
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.