இன்றைய ராசிபலன் (28-10-2025)
மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
ரிஷபம்
சோர்வு, களைப்பு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்
திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
கடகம்
எதையும் சாதிக்கும்நாள். தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
சிம்மம்
சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் சிலருக்கு மிகுந்த அலைச்சலுக்குப் பிறகே பலிதமாகும் நாள்.
கன்னி
உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
துலாம்
கடந்த கால இனிய அனுபவங்களெல்லாம் நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
தனுசு
சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
மகரம்
பழைய பிரச்சனைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மனத் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
கும்பம்
கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.
மீனம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் மதிப்பு உண்டாகும். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.
Posted in: ஜோதிடம்