×

இன்றைய ராசிபலன் (14-09-2025)

Link copied to clipboard!

மேஷம்

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

Advertisement

ரிஷபம்

வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

Advertisement

சமயோசிதமாகவும், சாதுரியமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் சிலருக்கு வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கிடைக்கும் நாள்.

கடகம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

Advertisement

சிம்மம்

சமயோசிதமாகவும். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அமோகமான நாள்.

கன்னி

Advertisement

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

துலாம்

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

Advertisement

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பும் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரும். இதனால் வேலை பளு அதிகரித்துக் காணப்படும். மொத்தத்தில், நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

Posted in: ஜோதிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

rasi palan

இன்றைய ராசிபலன் (03-11-2025)

மேஷம் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத…

Link copied to clipboard!
rasi palan

இன்றைய ராசிபலன் (30-10-2025)

மேஷம் உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்….

Link copied to clipboard!
rasi palan

இன்றைய ராசிபலன் (29-10-2025)

மேஷம் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்….

Link copied to clipboard!
rasi palan

இன்றைய ராசிபலன் (28-10-2025)

மேஷம் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்….

Link copied to clipboard!
error: