இன்றைய ராசிபலன் (07-10-2025)
மேஷம்
எதிலும் நிதானத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
ரிஷபம்
புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
மிதுனம்
எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர் களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கி யப் பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. செலவுகளில் திட்டமிடுதல் அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
கடகம்
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.
சிம்மம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.
துலாம்
எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் கவனமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
அலைச்சல் டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மகரம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
கும்பம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
மீனம்
குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.
Posted in: ஜோதிடம்