Skip to content
Daily Tamilnadu
ஞாயிறு, 20 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

இன்றைய ராசிபலன் (06-03-2025)

இன்றைய நாள் (06-03-2025)

குரோதி-மாசி 22-வியாழன்-வளர்பிறை

நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

மாலை –

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 1:30

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

கார்த்திகை அதிகாலை 4.54 வரை பின்பு ரோகிணி முழுவதும்

திதி

ஸப்தமி மாலை 3.55 வரை பின்பு அஷ்டமி

யோகம்

இன்று அதிகாலை 04.54 வரை அமிர்தயோகம் பின்பு காலை 06.26 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

சுவாதி

இன்றைய ராசிபலன்கள் :-

மேஷம் :

இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.

ரிஷபம் :

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம்.

மிதுனம் :

இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது.

கடகம் :

இன்று மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.

சிம்மம் :

இன்று வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

கன்னி :

இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

துலாம் :

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.

விருச்சிகம் :

இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.

தனுசு :

இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

மகரம் :

இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும்.

கும்பம் :

இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

மீனம் :

இன்று திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணபுழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

TRk5xn