இன்றைய ராசிபலன் (01-08-2025)
                மேஷம்
எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனை பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.
மிதுனம்
முன் கோபத்தை குறையுங்கள். தனிப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும் . திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
கடகம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
சிம்மம்
எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனை பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கன்னி
குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
துலாம்
உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் இறுதியில் அலைச்சலுக்குப் பிறகு அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு சிலருக்கு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமான முடிவு எடுக்கும் நாள்.
மகரம்
எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதி பெருகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.
கும்பம்
உங்கள் செயலில் வேகம்கூடும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மீனம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
Posted in: ஜோதிடம்