Skip to content
Daily Tamilnadu
புதன், 9 செப்டம்பர் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

இன்றைய ராசிபலன் (31-01-2026)

மேஷம்

எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். சிலருக்கு யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சில விஷயங்களில் அலைச்சல் தென்பட்டாலும் கூட உங்களது முயற்சி வீண் போகாது.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.

கடகம்

சில செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

Advertisement

சிம்மம்

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கன்னி

பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் இறுதியில் சிறு ஆதாயமும் உண்டு. எதிர்ப்புகள் இறுதியில் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எனினும், உத்தியோகத்தில் இறுதியில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும் நாள்.

துலாம்

சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உங்களைப்பற்றி வதந்திகள் வரும். அப்படி வரும் பட்சத்தில் அதனை பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. மொத்தத்தில், பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

தனுசு

எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமாக நாள்.

மகரம்

கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

கணவன் – மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். முடிந்த வரையில் அந்நியர் தலையீடு இல்லாமல் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் கவனமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

xKbnMK

Advertisement
Advertisement