ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (27-05-2025)

இன்றைய நாள் (27-05-2025)

விசுவாவசு-வைகாசி 13-செவ்வாய்-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 7:30 – 8:30

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

மாலை 7:30 – 8:30

நட்சத்திரம்

கார்த்திகை காலை 6.02 வரை பின்பு ரோகிணி முழுவதும்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

சுவாதி

இன்றைய ராசிபலன் :-

மேஷம் :

இன்று உங்களுடைய தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. ஓட்டுனர்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு மிக நல்ல காலகட்டமிது.

ரிஷபம் :

இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலம் போல் அனுகூலமான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும்.

மிதுனம் :

இன்று எந்த பிரச்சனைகளையும் முறியடிக்கும் வல்லமைகளும் பெறலாம். குடும்பத்தில் வசதிகள் தொடரும். ஆடம்பர பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். சற்று சிரத்தை எடுத்தால் சாதனைகள் செய்யலாம். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.

கடகம் :

இன்று எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை.

சிம்மம் :

இன்று தகுந்த வரன் கிடைத்து திருமணம் இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.

கன்னி :

இன்று நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் தேவை. பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். சிலர் கடன் வாங்கி உடனே திருப்பி கொடுத்து விடுவார்கள். மனதில் தேவையில்லாத வெளியில் சொல்லமுடியாத வேதனை மற்றும் பிரச்சனைகள் வரலாம்.

துலாம் :

இன்று நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம் இனிதே நடந்தேறும். இந்த நேரங்களில் வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

விருச்சிகம் :

இன்று தலைவலி மற்றும் வாயு சம்பந்தமான நோய்கள் வந்து குணமாகும். பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிரியமானவர்களிடம் அடிக்கடி உரையாடுங்கள்.

தனுசு :

இன்று வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.

மகரம் :

இன்று சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

கும்பம் :

இன்று மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறீர்கள். தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர்.

மீனம் :

இன்று வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: