×

இன்றைய ராசிபலன் (29-11-2025)

Link copied to clipboard!

மேஷம் :

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.

Advertisement

ரிஷபம் :

இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கச் செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம் :

Advertisement

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.

கடகம் :

இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்துவது வெற்றிக்கு உதவும்.

Advertisement

சிம்மம் :

இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது.

கன்னி :

Advertisement

இன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.

துலாம் :

இன்று கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

விருச்சிகம் :

Advertisement

இன்று கடன்சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

தனுசு :

இன்று தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

மகரம் :

இன்று உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.

கும்பம் :

இன்று நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

மீனம் :

இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும்.

Posted in: ஜோதிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

rasi palan

இன்றைய ராசிபலன் (14-12-2025)

மேஷம் குடும்பத்தினருடன் அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன்…

Link copied to clipboard!
rasi palan

இன்றைய ராசிபலன் (13-12-2025)

மேஷம் : இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது…

Link copied to clipboard!
baba vanga prediction2026

பாபா வாங்கா 2026 பற்றிய அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்: போர்கள், விபத்துக்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பல..! 2026 மிகவும் பயங்கரமானதா? பாபா வாங்காவின் குழப்பமான தீர்க்கதரிசனம்..!

பாபா வாங்காவின் கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் உண்மையாகி வருகின்றன. 2026 ஆம் ஆண்டு நெருங்கி வரும் வேளையில், பாபா வாங்காவின்…

Link copied to clipboard!
rasi palan

இன்றைய ராசிபலன் (11-12-2025)

மேஷம் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க…

Link copied to clipboard!
error: