Skip to content
Daily Tamilnadu
ஞாயிறு, 4 அக்டோபர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! • டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

இன்றைய ராசிபலன் (26-03-2026)

மேஷம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் செலவு வைக்கலாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியருடன் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்‌. மதிப்புக் கூடும் நாள்.

மிதுனம்

எதிர்காலம் பற்றிய பயம் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். முக்கியக் கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.

கடகம்

புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை யுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்கமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து விற்பனை அதிகரிப்பது உற்சாகப்படுத்தும். அதே சமயத்தில், செலவுகளும் சற்று அதிகரிக்கும் நாள்.

கன்னி

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வரக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்

திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மீனம்

மறதியால் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள் . யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எச்சரிக்கையுணர்வு தேவைப்படும் நாள்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

YSXrBd