Skip to content
Daily Tamilnadu
ஞாயிறு, 26 ஜூலை 2026
BREAKING
சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்!
Advertisement

இன்றைய ராசிபலன் (25-04-2026)

மேஷம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

Advertisement

ரிஷபம்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மிதுனம்

எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. செலவுகளில் திட்டமிடுதல் அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.

கடகம்

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

Advertisement

சிம்மம்

எதிலும் நிதானத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கன்னி

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்

தனுசு

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

மகரம்

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத் தான் இருக்கும்.

கும்பம்

நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

hcwQPq

Advertisement
Advertisement