Skip to content
Daily Tamilnadu
திங்கள், 13 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
Advertisement

இன்றைய ராசிபலன் (25-03-2026)

மேஷம்

முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

Advertisement

ரிஷபம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

Advertisement

சிம்மம்

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். எனினும் எதிர்பார்த்த லாபம் உண்டு. மொத்தத்தில், உங்களது திறமை மற்றும் விடா முயற்சி கொண்டு சோதனைகளை சாதனையாக மாற்றும் நாள்.

கன்னி

சில செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

துலாம்

எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியலாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் உயர் அதிகாரி பற்றி விமர்சிக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப் படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன மனக்கவலைகள் வந்து போகலாம். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலை ஆட்களால் பிரச்சனைகள் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

fwXnqc

Advertisement
Advertisement