Skip to content
Daily Tamilnadu
சனி, 15 ஆகஸ்ட் 2026
BREAKING
இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
Advertisement

இன்றைய ராசிபலன் (23-03-2026)

மேஷம்

பொருளாதாரம் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் வந்து போகும். மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்கவும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

Advertisement

ரிஷபம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவுகள் வரும். உத்தியோகத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும்.

Advertisement

சிம்மம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.

கன்னி

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் செலவு வைக்கலாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியருடன் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

தாயாரின் உடல் நிலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். திடீர் பயணங்கள் சிலருக்கு ஏற்படலாம். எனினும், குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். திடீர் என்று நம்பிக்கைகள் குறையும். முடிந்த வரையில் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளப் பாருங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

தனுசு

அவ்வப் போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

மகரம்

பேச்சில் அதிக நிதானமாக இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கவனம் தேவை. சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் அதிக அலைச்சலுக்குப் பிறகு பலிதமாகும்.

கும்பம்

தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கலாம். எனினும், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். போராடி இறுதியில் சாதிக்கும் நாள்.

மீனம்

சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

v9hGem

Advertisement
Advertisement