இன்றைய ராசிபலன் (21-02-2026)
மேஷம்
குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சிலருக்கு சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரயாணங்களில் அதிக விழிப்புணர்வுடன் இருந்து கொள்ளவும். அலைச்சல் சற்று அதிகரித்துக் காணப்படும். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள் சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
கடகம்
திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
கன்னி
அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம்.
துலாம்
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் அலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
விருச்சிகம்
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
தனுசு
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி, வாகனம் சம்மந்தமாக செலவுகள் அதிகரிக்கலாம். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை அதிகம் தேவைப்படும் நாள்.
மகரம்
வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள் சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்
சில எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடன்கள் குறித்து அவ்வப்போது யோசிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும் நாள்.
மீனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
0 கருத்துக்கள்