Skip to content
Daily Tamilnadu
திங்கள், 24 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

இன்றைய ராசிபலன் (19-02-2026)

மேஷம்

துணிச்சலான சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.

Advertisement

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

சில வேண்டத் தகாத அனுபவங்கள் ஏற்படும் நாள். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்‌. தொழில் போட்டிகளால் லாபம் கூடக் குறையலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

Advertisement

சிம்மம்

காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் அனுகூலம் உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கன்னி

புதிய முயற்சிகளை மட்டும் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

துலாம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன உளைச்சல் சற்று அதிகமாகத் தான் இருக்கும். யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். கணவன்-மனைவிக்குள் சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனம் தேவை. விழிப்புடன் இருக்கவேண்டிய நாள்.

தனுசு

செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு சிலருக்கு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி சிலருக்கு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.

மகரம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்தே காணப்படும். எனினும், சமாளித்து விடுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் திடீர் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் படிப்படியாக நீங்கும்.

கும்பம்

குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுடன் நேரத்தை செலவழிப்பார்கள். உங்களை சுற்றி உள்ளவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

மீனம்

கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரையைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

CLz8TA

Advertisement
Advertisement