Skip to content
Daily Tamilnadu
வியாழன், 20 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

இன்றைய ராசிபலன் (18-03-2026)

மேஷம்

கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

Advertisement

ரிஷபம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

சிலருக்குத் தாயாரின் உடல் நிலையில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது நிதானம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

Advertisement

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசிய சக ஊழியர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும்.

விருச்சிகம்

முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

தனுசு

உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும் . உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

கும்பம்

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மீனம்

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். மற்றவர்களுக்காக பரிந்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

g6tDDT

Advertisement
Advertisement