Skip to content
Daily Tamilnadu
திங்கள், 24 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

இன்றைய ராசிபலன் (16-03-2026)

மேஷம்

சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

ரிஷபம்

கடினமான வேலை களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

மிதுனம்

சில செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்

ஒரு சில புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். துவண்டு விட வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

Advertisement

சிம்மம்

அவ்வப்போது சுபச் செலவுகள் ஏற்படும். இதனால் கையிருப்பு குறையலாம். மற்றபடி, கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்சனைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல்நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழிலில் அல்லது உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி

உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். எனினும் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கலாம். சற்று கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

துலாம்

அவ்வப் போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

திடீர் என்று வீடு, வாகனம் அல்லது பராமரிப்பு சம்மந்தமான செலவுகள் ஏற்படும். பெரும்பாலும் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

கணவன் – மனைவி இடையே சின்னச், சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அலைச்சல் மிகுந்த நாள். சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்து கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எனினும் அலைச்சல் இருந்தாலுமே உங்கள் முயற்சியால் புதிய முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்

வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

Le6vPc

Advertisement
Advertisement