இன்றைய ராசிபலன் (12-02-2026)
மேஷம்
குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சிலருக்கு சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி, வாகனம் சம்மந்தமாக செலவுகள் அதிகரிக்கலாம். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை அதிகம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன உளைச்சல் சற்று அதிகமாகத் தான் இருக்கும். யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். கணவன்-மனைவிக்குள் சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனம் தேவை. விழிப்புடன் இருக்கவேண்டிய நாள்.
கடகம்
செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு சிலருக்கு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி சிலருக்கு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
சிம்மம்
குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சிலருக்கு சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.
கன்னி
செலவுகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். சோதனைகள் வந்தாலும் இறுதியில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறிய டிப்பீர்கள். காரியங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
துலாம்
ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப் பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
விருச்சிகம்
செலவு அதிகரிக்கும் தான். எனினும், திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். சிலருக்கு புதுவேலை கிடைக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். சில கஷ்டங்களுக்கு உங்களது அவசர முடிவு தான் காரணம் என்பதை உணர்வீர்கள். எதிர்பார்ப்புகள் இறுதியில் பூர்த்தியாகும் நாள்.
தனுசு
நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
மகரம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சில விஷயங்களில் அலைச்சல் இருக்கும் தான். எனினும் இறுதியில் உங்கள் முயற்சி திருவினை ஆக்கும். மொத்தத்தில், அயராத முயற்சியால் புதுமை படைக்கும் நாள்.
கும்பம்
அலைச்சல் இருந்தாலுமே முயற்சிகள் வீண் போகாது. தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு ஓரளவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். போராடி இறுதியில் உழைப்பால் உயரும் நாள்.
மீனம்
அதிக அலைச்சல் மிக்க நாள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனடியாக முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். எனினும், சில வேலைகள் இழுத்துக் கொண்டே போகும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சில உண்மையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமையுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
0 கருத்துக்கள்