இன்றைய ராசிபலன் (20-01-2026)
மேஷம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பியவர்களுடன் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
மிதுனம்
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனடியாக முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
கடகம்
வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
சிம்மம்
தந்தையின் உடல் நிலையில் மட்டும் கவனம் தேவை. மற்றபடி, உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும் படி இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சாதிக்கும் நாள்.
கன்னி
சில விஷயங்களில் திட்ட மிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களிடம் நெருடல்கள் வந்து நீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார். கவனம் தேவைப்படும் நாள்.
துலாம்
வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் மட்டும் கூடுதல் கவனத்துடன் சென்று வரவும். சிலருக்கு நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மற்றபடி, கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும் . வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்
ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். எனினும் சமாளித்து விடுவீர்கள். வழக்குகள் இறுதியில் சாதகம் ஆகும். எந்த ஒரு வேலையையும் அலைந்து திரிந்தே முடிக்க வேண்டி இருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
தனுசு
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்
சிலருக்கு புதிய கடன்கள் உதயம் ஆகலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனை வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.
கும்பம்
சின்னச், சின்ன சோதனைகள் வந்து போனாலும் சமயோசித புத்தி கொண்டு அதனை சாதனையாக மாற்றுவீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். பணவரவு ஏற்ற-இறக்கமாக இருந்தாலும் சமாளித்து கொண்டு செல்வீர்கள். சிலர் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். அதனால் சுபச் செலவுகளுக்கும் இடம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஆகலாம். எனினும் உங்களை வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
மீனம்
உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும் வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுவீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
0 கருத்துக்கள்