Skip to content
Daily Tamilnadu
ஞாயிறு, 4 அக்டோபர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! • டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

இன்றைய ராசிபலன் (10-01-2026)

மேஷம்

சிலருக்கு வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் மட்டும் நிதானமாக இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கூடுதல் கவனம் தேவை. மற்றபடி, புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அலைச்சல் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது.

ரிஷபம்

சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக புதிய கடன்கள் ஏற்படலாம். சிலருக்கு சகோதர வகையில் உதவிகள் உண்டு. சிலர் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிக நாட்டம் சிலருக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சிலர் வியாபாரத்தில் சிறு முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சின்னச், சின்ன பிரச்சனைகள் வரக்கூடும். கூட்டாளிகளுடன் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நன்மை, தீமை கலந்து நடக்கும் நாள்.

கடகம்

பேச்சில் அதிக நிதானமாக இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கவனம் தேவை. சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் அதிக அலைச்சலுக்குப் பிறகு பலிதமாகும்.

சிம்மம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி

உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். திடீர் என்று நம்பிக்கைகள் குறையும். முடிந்த வரையில் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளப் பாருங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

துலாம்

வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் அதிக நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பேச்சில் அதிக நிதானத்தை கைக்கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கூடுதல் கவனம் தேவை. எனினும், உறவினகள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். சிலர் உங்களை பற்றி தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புதுமுயற்சிகள் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்ற வர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன மனக்கவலைகள் ஏற்படும். மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்

தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். பொறுமை தேவைப்படும் நாள்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

MuPQVq