Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 22 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

இன்றைய ராசிபலன் (05-04-2026)

மேஷம்

ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சனைகள் அதிகமாகும் . நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்வார்கள். தலைச்சுற்றல் முழங்கால் வலி வந்து விலகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமாக நாள்.

கன்னி

குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சில தந்திரங்களை கற்றுக் கொள்வார்கள். இனிமையான நாள்.

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துச் சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். மற்றபடி, எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

தனுசு

பணவரவு ஓரளவே திருப்தி தரும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மகரம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சிலருக்கு உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். அதனால் சில செலவுகள் ஏற்படலாம். சிலர் வியாபாரத்தில் புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அலைச்சல் இருந்தாலுமே புது வாய்ப்புகள் சிலருக்கு வரும். சிலர் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

இன்றைய தினம் வேலைச் சுமையால் சோர்வு அடைவீர்கள். அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

crNUK9