Skip to content
Daily Tamilnadu
புதன், 23 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

இன்றைய ராசிபலன் (05-02-2026)

மேஷம்

சிலருக்கு வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம். சிலருக்கு பிள்ளைகள் வழியில் நல்ல தகவல்கள் வந்து சேரும். கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி சிலருக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட ஓரளவு லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். அலைச்சல் இருந்தாலுமே முயற்சியால் வெல்லும் நாள்.

ரிஷபம்

மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எனினும், தாயாரின் உடல் நிலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வீடு, வாகனம் சம்மந்தமான செலவுகள் ஏற்படலாம். ஆனாலும், பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு சோர்வு, அசதி வந்து போகலாம். திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் சிலர் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்

பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடியுங்கள். அவ்வப்போது ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் அதிகமாகும் . நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்வார்கள். தலைச்சுற்றல் முழங்கால் வலி சிலருக்கு வந்து விலகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். நிம்மதி உண்டாகும் நாள்.

கன்னி

உடல் ரீதியாக எலும்புகளில் வலி வந்து போகலாம். வீடு, வாகனம் சம்மந்தமான செலவுகள் ஏற்படலாம். கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

பேச்சில் மட்டும் அதிக நிதானத்தை கடைபிடியுங்கள். கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கவனம் தேவை. மற்றபடி, மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

சிலருக்குத் திடீர் மருத்துவச் செலவுகள் கூட ஏற்படலாம். அப்படியான, திடீர் செலவுகள் உங்களைத் திக்குமுக்காட வைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு

எந்த ஒரு காரியத்தையும் இரண்டு மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மகரம்

பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன கவலைகள் வந்து போகலாம். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் அதிக கவனம் தேவை. அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு சகோதர வகையில் நன்மை உண்டு. சிலருக்கு வழக்குகள் சாதகம் ஆகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். சிலர் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

ZcmkDH