விளம்பரம்

திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட கலெக்டர் உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

எனவே அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மே 3 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்வு:

0 கருத்துக்கள்

கருத்து தெரிவிக்க

Are you human? Please solve:Captcha


அறிவிப்புகள் 0
விளம்பரம்
விளம்பரம்
error: