விளம்பரம்

தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நாளை (பிப்.21), தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகிர்வு:

0 கருத்துக்கள்

கருத்து தெரிவிக்க

Are you human? Please solve:Captcha


அறிவிப்புகள் 0
விளம்பரம்
விளம்பரம்
error: