தமிழ்நாடு

டிசம்பர் 26, 2023: தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 26) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

சென்னையில், நேற்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6350க்கும், சவரனுக்கு ரூ.50,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5880க்கும், சவரனுக்கு ரூ.47,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை சற்றுஉயர்ந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6365க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.50,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ. 5895க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.47,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.80.70க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 30 காசுகள் அதிகரித்து ரூ.81க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 1 =

Back to top button
error: