நாளை (மே 9) தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் நாளை மே 9 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கௌமாரியம்மன் கோவிலில் தேரோட்ட திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதன் காரணமாக நாளை (மே 9) தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 17ம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
How do you react to this story?
Daily Tamilnadu on Google News
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
Add as Preferred Source
0 Comments