வடகிழக்குப் பருவமழை ஆரம்பம்: நள்ளிரவு முதல் பரவலாக மழை!
சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நேற்று (அக்டோபர் 16) நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.