தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி உள்ளது. இன்று துவங்கிய தேர்வு ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் பிற மொழிகளுக்கான தேர்வு நடக்கிறது.

இத்தேர்வை, 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த, 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது.

தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுகிறார்கள். மேலும், 3 ஆயிரத்து 350 பறக்கும் படைகளும், ஆயிரத்து 241 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − twelve =

Back to top button
error: