வேலைவாய்ப்பு

தேர்வு இல்லை.. தமிழ்நாடு வன அனுபவக் கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வன அனுபவக் கழகம் எழுத்துத் தேர்வு இல்லாமல் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வன அனுபவக் கழகம் TNWEC எனப் அறியப்படும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு துறை அமைப்பாகும். தமிழகத்தில் சுற்றுலா தொடர்பான திட்டங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த கழகத்தில் உள்ள ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு வன அனுபவ கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இங்குதான் காலியிடங்களை நிரப்புவதற்கான பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைமை செயல் அதிகாரி: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். மேனேஜ்மென்ட், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், டூரிசம் உள்ளிட்டவற்றில் முதுகலை படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாதசம்பளமாக ரூ.1.50 லட்சம் கிடைக்கும்.

நிறுவன செயலாளர் : இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். சிஎஸ் (இந்திய கம்பெனி செக்ரட்டி நிறுவனத்தின் உறுப்பினர்) தகுதியுடன் இருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.

நிதி அதிகாரி : இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். சிஏ, சிடபிள்யூஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பல் கூறப்பட்டுள்ளது.

நிர்வாக அதிகாரி : இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்பிஏ, மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகளில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.

உதவி அதிகாரி : அசோசியேட் (தொழில்நுட்பம்) பணிக்கு ஒருவரும், அசோசியேட் (பைனான்ஸ்) பணிக்கு ஒருவர் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அசோசியேட் (டெக்னிக்கல்) பணிக்கு டூரிசம் அன்ட் ஹாஸ்பிட்டாலிட்டி, எஃகோ டூரிசம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் சயின்ஸ் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

உதவி அதிகாரி : (நிதி) பணிக்கு பிபிஏ மற்றும் பைனான்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://tnwec.com இணையதளம் சென்று Career என்பதை கிளிக் செய்து டிசம்பர் மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 4 =

Back to top button
error: