Skip to content
Daily Tamilnadu
வெள்ளி, 23 அக்டோபர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! • டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

உங்கள் PAN கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? இதோ வழிமுறைகள்

நிரந்தர வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. எனவே, நீங்கள் PAN கார்டில் பிழைகளைச் சரிபார்த்து, பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது ஆன்லைனில் பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தை எவ்வாறு புதுப்பிப்பது என்பதைப் பார்ப்போம்.

முதலில், NSDL ன் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பான் டேட்டாவில் மாற்றம் அல்லது திருத்தம் என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதன் பின்னர், category type என்பதை கிளிக் செய்து Individual விருப்பத்தை தேர்வு செய்யவும். பின்பு, Captcha Code ஐ உள்ளிட்டு Submit கொடுக்கவும். பின்னர், KYC விருப்பத்தை தேர்வு செய்து புகைப்படம் பொருந்தவில்லை மற்றும் கையொப்பம் பொருந்தவில்லை என்பதை டிக் செய்து தந்தை அல்லது தாயின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதனையடுத்து, PAN Card Signature Change அல்லது Photo Update என்பதை கிளிக் செய்து தேவையான விவரங்களை பதிவு செய்து Submit கொடுக்க வேண்டும். இதன் பின்னர், பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்றுவதற்கு ரூ.101 தொகையை செலுத்த வேண்டும். இதன் பின்னர், விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வருமான வரித்துறையின் பான் சேவை பிரிவுக்கு அனுப்ப வேண்டும். இதன் பின்னர், ஓரிரு நாட்களில் உங்களது பான் கார்டு அப்டேட் செய்யப்பட்டுவிடும்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

sYweaN