இந்தியா

Union Budget 2024: நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்!!

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நாடாளுமன்றத்தில் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் 2-வது நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார்.

இன்றைய பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளுடன் கூடிய கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

92 − ninety =

Back to top button
error: