Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 21 ஜூலை 2026
BREAKING
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்! யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 395 அதிகாரி பணியிடங்கள்: மாதச் சம்பளம் ரூ.1.56 லட்சம் வரை – விண்ணப்பிப்பது எப்படி? FIFA உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, வெற்றியாளர்களுக்குப் பதக்கங்களுடன் மோதிரங்களும் வழங்கப்படும்! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்! யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 395 அதிகாரி பணியிடங்கள்: மாதச் சம்பளம் ரூ.1.56 லட்சம் வரை – விண்ணப்பிப்பது எப்படி? FIFA உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, வெற்றியாளர்களுக்குப் பதக்கங்களுடன் மோதிரங்களும் வழங்கப்படும்!
Advertisement

இந்தியாவில் முதல் அலுவலகத்தைத் திறக்கும் OpenAI..!

பிரபல AI நிறுவனமான OpenAI, இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்துள்ளது. ChatGPT-ஐப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் தலைநகரான புது தில்லியில் இந்த அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

எந்தப் பகுதியில் அலுவலகம் திறக்கப்படும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. OpenAI-ன் இந்த நடவடிக்கை, இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

OpenAI Sam Altman

OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “முதல் அலுவலகத்தைத் திறப்பதும், புதிய ஊழியர்களை நியமிப்பதும், நாட்டில் AI-ஐ மேலும் அணுகக்கூடியதாக மாற்ற உதவும்” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவிற்குப் பிறகு, இந்தியா OpenAI-க்கு இரண்டாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டில் ChatGPT-ஐப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

LW2yL6

Advertisement
Advertisement