இந்தியா

KYC செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும் – மார்ச் 31 கடைசி நாள்!

இந்தியாவில் பலர் வீட்டு எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. நீங்கள் எரிவாயு சிலிண்டரில் தொடர்ந்து மானியம் பெற விரும்பினால், நீங்கள் KYC செய்து கொள்ள வேண்டியது அவசியம். KYC செய்து முடிக்க மார்ச் 31 கடைசி நாள். தவறினால் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு மானியம் நிறுத்தப்படும்.

KYC ஐ இரண்டு வழிகளில் செய்யலாம்:

சிலிண்டர் ஏஜென்சி அலுவலகத்திற்குச் சென்று KYC செய்துகொள்ளலாம். இது மட்டுமின்றி, ஆன்லைனில் KYC செய்யும் விருப்பத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஆன்லைன் மூலம் KYC செய்ய எளிய வழிமுறைகள் இதோ,

  • முதலில் அதிகாரப்பூர்வ வலைதளமான https://www.mylpg.in/என்பதற்குள் செல்ல வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் ஹச் பி இந்தியன் மற்றும் பாரத் கேஸ் கம்பெனி எரிவாயு சிலிண்டர்களின் படங்கள் இருக்கும்.
  • உங்களுடைய எரிவாயு நிறுவனத்தின் சிலிண்டர் படத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் KYC விருப்பம் காட்டும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் ஆதார் சரிபார்ப்பு கேட்கப்படும் மற்றும் OTP வரும் OTP வந்தபின் புதிய பக்கம் திறக்கும்.
  • இந்த பக்கத்திற்கு பின் நிறுவனம் கேட்கும் விபரங்களை உள்ளிட வேண்டும். இதன்பின் KYC புதுப்பிப்பு செயல்முறை முடிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + three =

Back to top button
error: