இந்தியா

கடும் பனிமூட்டம்.. டெல்லியில் கண்ணுக்கு தெரியாத சாலை.. 110 விமானங்கள், 25 ரயில்கள் சேவை பாதிப்பு

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இதோடு விமான மற்றும் ரயில் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக 110 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதில் சில விமானங்கள் மற்ற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், 25 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

பனியின் பிடியில் தத்தளித்து வரும் டெல்லியில் வெப்பநிலை 7 டிகிரியாக குறைந்துள்ளது. டெல்லி மட்டுமல்ல, வட இந்தியா முழுவதும் இதுதான் நிலைமை. உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி-என்சிஆர் ஆகிய மாநிலங்களில் குளிர் காற்று அச்சுறுத்தி வருகிறது. வெப்பநிலை மோசமாகக் குறைந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − ninety three =

Back to top button
error: